தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஏற்பட்ட கன மழையினால் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதிகளில் விளைவிக்கப்படும் முருங்கைக்காய்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. போதிய விளைச்சலுடன் உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் இந்தாண்டு கோடை காலத்தில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வறட்சி காலப் பயிரான முருங்கைக்காயின் விளைச்சல் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.அதே சமயம் தென் தமிழகமான திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பருவ மழை பொய்த்து போனதுடன் கோடை மழையை எதிர்பார்த்தவர்களுக்கு கடும் ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால் வறட்சி காலங்களிலும் போதிய அளவில் விளைச்சலை தரும் முருங்கைக்காயின் சாகுபடி வழக்கத்தை விட சற்றே இந்தாண்டு அதிகரித்துள்ளது.மிக குறைவாக தண்னீர் இருந்த முருங்கைக்காய் உற்பத்திக்கு சொட்டுநீர் பாசனம் பெரிய அளவில் கைகொடுத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் தமிழகத்தில் இந்தாண்டு ராதாபுரம் மற்றும் திசையன்விளை பகுதி முருங்கைக்காய்களுக்கு மவுசு கூடியுள்ளது.கிலோ பத்து ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டு வந்த முருங்கைக்காய் தற்போது கிலோ 80ரூபாய்க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
—-வேந்தன்