தமிழகம்

“ரஜினி கட்சியால் திமுகவிற்கு தான் ஆபத்து” – எச்.ராஜா

ரஜினி கட்சியால் திமுகவிற்கு தான் ஆபத்து என பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரையில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு திமுக தமிழகத்தில் குழப்பம் ஏற்ப்படுத்த நினைக்கிறது எனவும், வேளாண் சட்டங்கள் குறித்து திமுக தவறான பிரச்சாரம் செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் திமுக, காங்கிரஸ், விசிக ஆகிய தீய சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்த அவர், வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து தெரியாமல் பேசுபவர்கள் முட்டாள்கள், வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து தெரிந்தும் பேசுபவர்கள் அயோக்கியர்கள், என்றார்.

ஆ.ராசா குறித்து கருத்து தெரிவித்த எச்.ராஜா, ஜனவரி 31 வரை மட்டுமே ஆ.ராசாவால் பேச முடியும் என்றும், 2ஜி வழக்கின் மேல் முறையீட்டு தீர்ப்பு விரைவில் வர உள்ளதை ஆ.ராசா ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். வேளாண் சட்டம் குறித்து ஆதானி நிறுவனம் மிக தெளிவாக அறிக்கை கொடுத்து விட்டது, 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளை காப்பற்ற கொண்டு வரப்பட்ட சட்டம் என தெரிவித்தார்.

திமுகவுக்கு மக்கள் சட்டமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறிய அவர், 1996ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் திமுகவுக்கு குரல் கொடுத்தார், ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என கூறினார் அதனால் ரஜினிகாந்த் கட்சியால் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தான் ஆபத்து என்று கூறினார். மேலும் ரஜினிகாந்த்தை குறைத்து மதிப்பிட கூடாது என்றும், அமித் ஷா வருகையால் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை எனவும் எச்.ராஜா கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Web Editor

முழு ஊரடங்கு அமல்!

EZHILARASAN D

நரபலிக்கு முன்பே ஒரு கொலை செய்த கொடூரம் – கைதானவர் அதிர்ச்சி வாக்குமூலம்

EZHILARASAN D

Leave a Reply