ரஜினி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாற்றங்கள் நிகழும், என அவரது அண்ணன் சத்யநாராயணா கருத்து தெரிவித்துள்ளார்.
ரஜினியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு, ரஜினியின் நலனுக்காகவும் நாட்டு மக்களின் நலனுக்காகவும், திருவண்ணாமலையில் உள்ள அருணகிரி நாதர் திருக்கோயிலில், மிருத்தியஞ்ஜெய ஹோமத்தை, அவரது அண்ணன் சத்திய நாராயணா நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் ரஜினியால் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்றும், அவரது ஆட்சி அமைந்தால், ரஜினிகாந்த் அதிகளவில் தொழிற்சாலைகளை கொண்டு வருவார் என்றும் சத்தியநாராயணா தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரஜினி கட்சி தொடங்குவதன் மூலம் நல்லதே நடக்கும் என்றும், கட்சியில் ரஜினியின் ரசிகர்களுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்றும், அவர் குறிப்பிட்டார்.