முக்கியச் செய்திகள் தமிழகம்

ரஜினியின் கட்சி பெயர் மக்கள் சேவை கட்சி? ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு!

மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்தின் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவதாகவும், அது குறித்த அறிவிப்பை வருகிற 31ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. கட்சிக்கு பாபா முத்திரை சின்னம் கோரப்பட்ட நிலையில், ஆட்டோ ரிக் ஷா சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்தின் கட்சி மற்றும் சின்னம் குறித்த அறிவிப்பு கிடைத்ததால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் அவரது கட்சி சின்னத்தை அச்சிட்டு வருகின்றனர்.

இருப்பினும் ‘மக்கள் சேவை கட்சி’, ஆட்டோ சின்னம் குறித்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. டிசம்பர் 31-ம் தேதி அனைத்துமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisement:
SHARE

Related posts

தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டண விவகாரம்: அரசுக்கு மதுரைக் கிளை உத்தரவு!

Halley karthi

ஜாமீனில் விடுதலையானார் ஆர்யன் கான்

Halley karthi

Leave a Reply