தமிழகம்

ரஜினியின் அறிவிப்பு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், அவரின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்; கமல்ஹாசன் கருத்து!

கட்சி தொடங்கவில்லை என்ற ரஜினியின் அறிவிப்பு சற்றே ஏமாற்றமாக இருந்தாலும், அவரின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், இரண்டாவது நாளாக நாகையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். வேளாங்கண்ணி தனியார் விடுதியில், மகளிர் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், பெண் உறுப்பினர் சேர்க்கைக்கான அடையாள அட்டைகளை வழங்கி உரையாற்றினார். தொடர்ந்து மயிலாடுதுறையில் பிரச்சாரம் மேற்கொண்ட கமல், அங்குள்ள தனியார் மண்டபத்தில் பெண்களிடம் உரையாற்றினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய அவர், ரஜினி நலமாக இருக்க வேண்டும்; எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும், என தெரிவித்தார். மேலும், 600 நாட்களை கடந்தும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, இதுவரை தண்டனை வழங்கப்படவில்லை, என கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு

G SaravanaKumar

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்கிய முதலமைச்சர்

பொறியியல் படிப்புகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

EZHILARASAN D

Leave a Reply