ரஜினிகாந்த் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்தால் பாஜக வரவேற்கும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருச்செந்தூரில் வரும் 7ஆம் தேதி நிறைவடைய உள்ள பாஜகவின் வேல் யாத்திரையில் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். பல்வேறு பகுதிகளில் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போரட்டம் தேவையற்றது என எல். முருகன் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளை வெளிநாடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய வாய்ப்பாக அமையும் என்றும் கூறினார். தமிழகத்திலும் விவசாயிகள் திருத்தச்சட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் தவறாக சித்தரித்து போராட்டத்தை தூண்ட முயற்சித்தது முறியடிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
ரஜினிகாந்த் ஒரு சிறந்த ஆன்மீகவாதி, தேசிய சிந்தனை கொண்டவர் என்றும் அவர் புதிதாக அரசியல் இயக்கம் ஆரம்பித்தால் பாஜக வரவேற்கும் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.