சினிமா

யூடியூப்பில் கெத்து காட்டிய ‘மாஸ்டர்’ டீசர்…. விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூடியூப்பில் 5 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். பொங்கலை முன்னிட்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர் தீபாவளியையொட்டி நவம்பர் 14ம் தேதியன்று வெளியிடப்பட்டது. வெளியான நாள் முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இத்திரைப்படத்தின் டீசர் தற்போது யூடியூப்பில் 5 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் குறுகிய நாட்களில் அதிக பார்வைகளை பெற்ற டீசர் என்ற சாதனையை மாஸ்டர் டீசர் படைத்துள்ளது. இதற்கு முன்னர் நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவான பிகில் திரைப்படத்தின் டீசர் 5 கோடி பார்வைகளை கடந்திருந்தது. நடிகர் அஜித்தின் விஸ்வாசம் ட்ரெய்லர் 3.3 கோடியும், ரஜினியின் பேட்ட ட்ரெய்லர் 2.7 கோடி பார்வைகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

5 நாட்களில் 150 கோடி – வசூல் வேட்டையில் விஜய்யின் “வாரிசு”

G SaravanaKumar

தந்தையின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை சினேகா

Web Editor

’எந்த ஒரு படத்தையும் விமர்சனங்கள் வாயிலாக பார்க்க வேண்டாம்’ – விஜய் சேதுபதி

EZHILARASAN D

Leave a Reply