கோவா மாநில ஆம் ஆத்மியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், 2017ல் அம்மாநில முதல்வர் முகமாக இருந்தவருமான எல்விஸ் கோம்ஸ், கட்சியில் மேலிட தலையீட்டால் ஏற்பட்ட அதிருப்தியில் ஆம் ஆத்மியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக எல்விஸ் கோம்ஸ் கூறுகையில், கோவாவில் ஆம் ஆத்மியின் செயல்பாட்டை டெல்லியிலிருந்து இயக்குகின்றனர், கோவா மக்களுக்காக ஆம் ஆத்மி செயல்படவில்லை, மாறாக டெல்லியில் இருப்பவர்களின் சுய விருப்பத்தின் பேரில் இக்கட்சி இயங்குகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீக காலமாக ஆம் ஆத்மி தனது கொள்கையிலிருந்து விலகிவிட்டது, டெல்லி லாபியால் கட்டுப்படுவதில் எனக்கு விருப்பமில்லை என்பதால் ஆம் ஆத்மியில் இருந்து விலகுகிறேன் என எல்விஸ் கோம்ஸ் தெரிவித்துள்ளார்.
எல்விஸ் கோம்ஸ் உடன் மேலும் சில தலைவர்களும் ஆம் ஆத்மியில் இருந்து விலகியுள்ளனர்.
முன்னதாக கடந்த செப்டம்பரில் மாநில ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த எல்விஸ் கோம்ஸ் தான் அடிமட்ட அளவில் தொண்டராக பணிபுரிய விருப்பப்படுவதாக கூறி தனது மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.