தமிழகம்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை; உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு கோவில் வளாகம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பாலாறு தேனாறு ஆகிய பகுதிகளில் காட்டாற்று வெள்ளத்தால் பஞ்சலிங்க அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கீழ்ப்பகுதியில் இருக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில் வளாகம் முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது இதனால் திருமூர்த்தி மலைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து மழையின் அளவு குறைந்து அருவியில் தண்ணீர் அளவு குறையும் வரை பாதுகாப்பு கருதி தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

அருவி பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்லாத முடியாதவாறு வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் விரைவாக உயர்ந்து வருகிறது இதனால் திருப்பூர் கோவை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்..!

Web Editor

நாகை, கடலூர், பாம்பன் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

G SaravanaKumar

பொன்னியின் செல்வன் 2 : இசை & ட்ரெய்லரை வெளியிடும் உலகநாயகன்!!

Web Editor

Leave a Reply