விளையாட்டு

மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றி; இந்திய அணியை பாராட்டிய விராட் கோலி!

ஆஸ்திரிரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து இந்திய அணிக்கு கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாளான இன்று சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி ஆஸ்திரேலியாவை 200 ரன்களுக்கு சுருட்டியது. இதனை அடுத்து 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்திய அணியின் இந்த அசத்தல் வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இது ஒரு அருமையான வெற்றி, ஒட்டுமொத்த அணியும் அபாரமாக செயல்பட்டுள்ளது. இந்த வெற்றியை தேடித்தந்த அணியினரையும் அணியை வழி நடத்திய ரஹானேவையும் நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

முதல் குழந்தை பிறக்கவுள்ளதால் தனது மனைவியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியை முடித்துவிட்டு இந்தியா திரும்பி விட்டார். இதனால் மீதமுள்ள மூன்று போட்டிகளுக்கும் ரஹானே கேப்டனாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன்-வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி நம்பிக்கை

Web Editor

இதயத்தில் அறுவை சிகிச்சை.. மீண்டார் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Gayathri Venkatesan

மும்பையிடம் போராடி வென்றது டெல்லி கேபிடல்ஸ்

G SaravanaKumar

Leave a Reply