மு.க.அழகிரியை புறந்தள்ளி விட்டு திமுக ஆளும் கட்சியாக வருவது நடக்காத ஒன்று என மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரை பழங்காநத்தத்தில் அம்மா மினி கிளினிக்கை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். சென்னையில் அதிமுக சார்பில் முதல் பிரச்சார கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இது 2021ல் வெற்றியை நிர்ணயிக்கும் பிரச்சாரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு தொடர்பாக எந்த சர்ச்சையும் இல்லை என்று செல்லூர் ராஜூ உறுதிபட கூறினார். கருணாநிதியின் திறமைகள் அனைத்தும் மு.க.அழகிரியிடமும் உள்ளது என்பதால், மு.க. அழகிரியை தாண்டி திமுக ஆளும் கட்சியாக வரும் என்பது நடக்காத ஒன்று என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்