உலகம்

முறையான பராமரிப்பின்மை; பாகிஸ்தானில் இருந்து கம்போடியா சென்றடைந்த உலகின் தனிமையான யானை!

முறையான பராமரிப்பின்மை காரணமாக பாகிஸ்தானில் உள்ள ஒரே ஆசிய யானை காவன் இன்று விமானம் மூலம் கம்போடியா நாட்டுக்கு சென்றடைந்தது.

வனவிலங்குகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் மிக மோசமாக உள்ள தெற்காசிய நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் இருந்து வருகிறது. விலங்கு நலனைப் பாதுகாப்பதற்கான சட்டம் ஏதும் பாகிஸ்தானில் இல்லாததால் அங்குள்ள உயிரியல் பூங்காக்கள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டில், வடமேற்கு நகரமான பெஷாவரில் மூன்று பனி சிறுத்தை குட்டிகள் உட்பட ஒரு புதிய உயிரியல் பூங்கா திறக்கப்பட்ட சில மாதங்களுக்குள் ஒரே சமயத்தில் 30க்கு மேற்பட்ட வன விலங்குகள் அங்கு இறந்தன.

இதனிடையே 1985 ஆம் ஆண்டில் இலங்கையால் காவன் மற்றும் சாஹெலி என்ற இரண்டு ஆசிய யானைகள் பாகிஸ்தானுக்கு பரிசளிக்கப்பட்டன. இதில் சாஹெலி என்ற யானை கடந்த 2012 ஆம் ஆண்டு குடலிறக்கம் காரணமாக உயிரிழந்தது. இதனை தொடர்ந்து காவம் என்ற அந்த ஒற்றை யானை மட்டும் அங்கு இருந்து வந்தது. ஆனால் அந்த யானை முறையாக பராமரிக்கப்படாததால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வந்தது. இதனை கண்ட சர்வதேச விலங்குகள் ஆர்வலர் ஒருவர் பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வனவிலங்கு பூங்காவின் மோசமான பராமரிப்பை கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து விலங்குகளையும் வேறு பகுதிகளுக்கு மாற்ற அனுமதியளித்தது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, கவான் யானையை கம்போடியாவுக்கு கொண்டு செல்ல ஆஸ்திரியாவை தளமாகக் கொண்ட விலங்கு நலன் மற்றும் மீட்புக் குழு ஃபோர் பாவ்ஸ் இன்டர்நேஷனல் முன்வந்துள்ளது. அதன்படி 35 வயதான அந்த ஆசிய யானையை ஜம்போ” ஜெட் விமானத்தில் மூலம் சுமார் 25,000 ஏக்கர் உள்ள கம்போடிய வனவிலங்கு சரணாலயத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் நீண்ட பயிற்சிக்கு பின்னர் பாகிஸ்தானில் இருந்து விமானத்தில் ஏற்றப்பட்ட காவன் யானை, இன்று பத்திரமாக கம்போடியா சென்றடைந்தது. அதிகாலை 2.30 மணியளவில் வந்திறங்கிய யானைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக தெரிவித்துள்ள விலங்குகள் நலக்குழு ஃபோர்வர்ஸின் கால்நடை மருத்துவர் அமீர் காலி, காவன் யானையை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. யானை விமானத்தில் பயணிக்கும் போது பயப்படவில்லை பலமுறை பயணித்த விமானப் பயணி போல இயல்பாக இருந்தது. இனி காவன் உலகின் தனிமையான யானையாக இருக்க மாட்டார். சுமார் 600 யானைகள் உள்ள சரணாலயம் இனி அவரது புகழிடமாக இருக்கும் என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

பாகிஸ்தானில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 7 கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்த பரிதாபம்!

Saravana

உலக சிஇஓ பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட மார்க் ஸ்க்கர்பர்க்கு!

பணத்தை அள்ளிக் கொண்டு தப்பி ஓடினாரா? ஆப்கான் அதிபர் விளக்கம்

Gayathri Venkatesan

Leave a Reply