குற்றம் தமிழகம்

முன்னாள் ரவுடியை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள மர்ம நபர்கள்!

முன்னாள் ரவுடியை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள மர்ம நபர்கள், அவரது, உடலை பெருந்துறை பகுதி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக முட்புதரில் வீசிச் சென்றுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சேலம்- கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் முட்புதரில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரத்த காயங்களுடன் கிடந்த அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஓலப்பாளையம் பகுதியில் வசித்து வந்த முன்னாள் ரவுடி முத்துப்பாண்டி என்பது தெரிய வந்தது. மேலும், இவர் மேல் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சில வருடங்களாக எந்த குற்றத்திலும் ஈடுபடாமல் இருந்த நிலையில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றுள்ளதா அல்லது நண்பர்களுடன் மது அருந்த சென்றபோ ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பேருந்தில் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D

தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

Web Editor

விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 இழப்பீடு: முதலமைச்சர்

EZHILARASAN D

Leave a Reply