அனைத்து கார்களிலும் முன் இருக்கை பயணிகளுக்கு ‘ஏர் பேக்’கட்டாயமாக்க மத்திய போக்குவரத்துத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
கார் ஓட்டுநருக்கு கட்டாயம் ‘ஏர் பேக்’ இருக்க வேண்டும் என்ற விதிமுறை 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஓட்டுநருக்கு மட்டும் ஏர் பேக் வசதி இருப்பதால் முன் இருக்கையில் பயணிப்போரின் உயிருக்கு பாதுகாப்பு குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் விபத்தின் போது மிக மோசமாக காயமடையவும் வாய்ப்பு உள்ளது. பல சந்தர்ப்பங்களில் முன் இருக்கை பயணிகள் உயிரிழப்பதும் நிகழ்ந்துள்ளதாக புகார்கள் வெளிவந்தன. இதனிடையே முன் இருக்கையில் இருப்பவர்களும் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து கார்களிலும் முன் இருக்கை பயணிகளுக்கும் ‘ஏர் பேக்’கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை மேற்கொண்டு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அனைத்து கார்களிலும் முன் இருக்கை பயணிகளுக்கு ‘ஏர் பேக்’கட்டாயமாக்க மத்திய போக்குவரத்துத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதில் தனது இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட வரைவு திருத்தத்தின் மூலம் எம் 1 வகை கார்களுக்கு பொருந்தக்கூடிய நிலையான தேவைகளை அமைச்சகம் மாற்றியமைத்ததுள்ளது.