முக்கியச் செய்திகள் உலகம்

‘முதல் முதலாக ஒலியின் வேகத்தை கடந்த மனிதர்’ சக் யேகர் காலமானார்!

முதல் முதலாக ஒலியின் வேகத்தை கடந்த மனிதர் என்ற சாதனையைச் செய்த அமெரிக்க விமானி சக் யேகர் காலமானார்; அவருக்கு வயது 97.

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவி 1923 பிப்ரவரி 13 அன்று பிறந்தவர் சார்லஸ் எல்வுட் சக் யேகர். தனது 18 வயது வரை விமானங்களையே பார்திராத சக் யேகர் பின்னாளில் விமானபொறியாளரானார்.

இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இவரின் அசாத்திய பொறியியல் ஞானத்தால் 21 வயதிலேயே விமானியாக பதவி உயர்வு பெற்று பல விமானங்களை சுட்டு வீழ்த்தி அமெரிக்க விமானப்படையின் கொண்டாடப்பட்ட விமானியானார்.

1947 அக்டோபர் 14 அன்று ஒலியின் வேகத்தை விட வேகமான போர் விமானத்தில் பறந்து ஒலியின் வேகத்தை கடந்த முதல் மனிதர் என்ற வரலாற்று சாதனையை சக் யேகர் படைத்தார். சக் யேகரின் இச்சாதனை அமெரிக்க விண்வெளி திட்டத்திற்கு வழி வகுக்க உதவியது

1983ல் வெளிவந்த ‘The Right Stuff’ என்ற திரைப்படம் சக் யேகரை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

பல்வேறு பெருமைகளுடன் தனது ஓய்வு வாழ்க்கையை வாழ்ந்து வந்த விமானி சக் யேகருக்கு வயது 97. இந்நிலையில் ஒலியின் வேகத்தை கடந்த முதல் மனிதர் என்ற வரலாற்று சாதனயை படைத்த சக் யேகர் இன்று காலமானதாக அவரின் மனைவி அறிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் இதுவரை 8.7 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!

Halley karthi

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா; மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்

Halley karthi

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று!

Halley karthi

Leave a Reply