அடலெய்ட்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும் டி20 தொடரை இந்தியாவும் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அடலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இரண்டாம் நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை அடுத்து 60 ரன்கள் முன்னிலையில் 3 ஆவது நாளான இன்று தனது இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி வெறும் 36 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து டிக்லர் செய்தது. இதனை அடுத்து 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 21 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதில் ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஜோ பர்ன்ஸ் 51 ரன்களையும், மேத்திவ் வேட் 33 ரன்களையும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.