முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான்; கூட்டணியில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்: அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் அதிமுக கூட்டணியில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை நடைபெற உள்ள அதிமுக பிரச்சார தொடக்க பொதுக்கூட்ட ஏற்பாடுகளை அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வெற்றி இயக்கம் என்றும் அதிமுக எஃகு கோட்டையாக உள்ளது என்றும் தெரிவித்தார். அதிமுக தலைமையில்தான் கூட்டணி என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், அதை மீறி எதுவும் நடக்காது, இதை 100 முறை கூட தெரிவிப்பேன் என கூறினார். திமுக ஆட்சி அமைப்பது என்பது பகல் கனவு எனவும், அது கானல் நீராகத்தான் போகும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

பாக்.வெற்றியை கொண்டாடுவோர் மீது தேசத்துரோக வழக்கு: யோகி எச்சரிக்கை

Halley karthi

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

Vandhana

இறைச்சி மற்றும் மீன் கடைகள் சனிக்கிழமை இயங்க தடை!

Ezhilarasan

Leave a Reply