தமிழகம்

‘முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை’ இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை!

மாமல்லபுரம் சுற்றுலா விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்கும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

மாமல்லபுரத்தில் வருகின்ற 2021 புத்தாண்டு கொண்டாடுவது குறித்து ஓட்டல் உரிமையாளர்களுடன் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், 2021 புத்தாண்டில் கேளிக்கை நிகழ்ச்சிகள் உள்ளிட கொண்டாட்டங்களை நடத்தக் கூடாது என்றார். அரசு பிறப்பித்துள்ள கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை பின் பற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். ஓட்டல், ரிசார்ட் ஆகியவற்றில் மட்டுமின்றி பண்ணை வீடுகளில் கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். வரும் 31 ஆம் தேதி இரவு 10 மணி வரை மட்டுமே மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க முடியும் என்று தெரிவித்த அவர், மது குடித்து விட்டு வாகனம் ஒட்டுபவர்கள், அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். புத்தாண்டை முன்னிட்டு மாமல்லபுரத்தில் 500 க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியமர்த்தப்படுவதாகவும் கண்ணன் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

ரேஷன் கடைகளில் புகார் பதிவேட்டை பராமரிக்க உத்தரவு

Gayathri Venkatesan

ரஜினியுடன் விருது பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது – தனுஷ்

Halley karthi

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்

Halley karthi

Leave a Reply