முகநூல் வாயிலாக மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களை ஏமாற்றிய இளைஞரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்த செளஜன்யா எனும் பெண் அளித்த புகாரின் பேரில் ஐதராபாத்தைச் சேர்ந்த விஜய்பாஸ்கரை போலீஸார் கைது செய்தனர். காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், விஜயபாஸ்கருக்கு கடந்த 2017 -ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது தெரியவந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமது திருமணத்தை மறைத்து முகநூல் வாயிலாக மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடம் இவர் பழகி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. முகநூலில் பழகிய பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாகக்கூறி பண மோசடியில் ஈடுபட்டும் வந்துள்ளார். இதுவரை ஆறு பெண்களை விஜயபாஸ்கர் ஏமாற்றி பணம் பறித்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, புகாரளித்த பெண்ணின் காலில் விழுந்து அந்த இளைஞர் மன்னிப்பு கேட்கும் காட்சி இணையத்தில் வைரல் வருகிறது.