முக்கியச் செய்திகள் தமிழகம்

முகக் கவசம் அணிந்ததற்கு அபராதம்- போலீசார் மீது வலுக்கும் கண்டனம்

முகக் கவசம் அணிந்து வந்த இரத்தம் கொடையாளருக்கு, அபராதம் விதித்த பெரம்பலூர் போலீசார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் தலா ரூ. 200 அபராதம் விதித்து வருகின்றனர் .

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுக்க ஒரு தனியார் அறக்கட்டளையை சேர்ந்த சூரியகுமார், நேற்று வேப்பந்தட்டை பகுதியில் இருந்து மற்றொரு ரத்த கொடையாளரை அழைத்து வருவதற்காக நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.

அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவர்களை வழிமறித்து, அவர்களில் ஒருவருக்கு முககவசம் அணியவில்லை என்று கூறி ரூ.200 அபராதம் விதித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் 2 பேரும் முககவசம் அணிந்திருந்ததாகவும், ஆனால் ரசீதில் அபராதம் எதற்காக விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

முககவசம் அணிந்தும் போலீசார் அபராதம்விதித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், முக கவசம் அணிந்தும் அபராதம் கட்டியதால் மக்கள் நலன் பொதுப்பணியை மேற்கொள்ளும் சமூகஆர்வலர் சூரியகுமார் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல்தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு

Saravana Kumar

கோயில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு பேட்டி

Halley Karthik

அசாம், மேற்வங்கத்தில் நாளை 3வது கட்ட வாக்குப்பதிவு

Gayathri Venkatesan