அமெரிக்க அதிபர் டிரம்ப், டிக்டாக் செயலிக்கு விதித்த தடை உத்தரவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
டிக்டாக் செயலியானது அமெரிக்க பாதுகாப்புக்கு எதிராக இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். இதையடுத்து சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலிக்கு கடந்த செப்டம்பர் 20-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்ததார். இதையடுத்து டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனம் ஒன்று வாங்க இருப்பதாக தகவல் வெளியானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனவே டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்துவது தாமதம் ஆனது. இந்த நிலையில், டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு அமெரிக்காவின் பெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்ததாகவும் நீதிபதி விமர்சனம் செய்துள்ளார்.