பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள, கொரோனா வார்டை ஆய்வு செய்த பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், உருமாறிய கொரோனா தொற்று சிகிச்சைக்காக, 120 தனி படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேபோல், பிற மருத்துவமனைகளிலும் புதிய வகை கொரோனா பாதிப்புக்காக, தனிப்பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். பிரிட்டனில் இருந்து வந்த 13 பேருக்கு, தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாவும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 12 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாவும், அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதிய வகை கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, என அறிவுறுத்திய அமைச்சர், அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தால், மீண்டும் ஊரடங்கு தேவைப்படாது என்றும், அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.