மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகத்தில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்தில் 30 ஆயிரம் காலி பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப மின் துறை உத்தரவிட்டதை கண்டித்து கிருஷ்ணகிரியில், மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் – மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில், ஈடுபட்ட ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விழுப்புரத்தில் நடைபெற்ற மின் ஊழியர்களின் போராட்டம் காரணமாக, செயற்பொறியாளர் அலுவலகம்,உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் மின்வாரிய பணிகள் தேக்கமடைந்துள்ளன. புதுக்கோட்டையில் போராட்டம் நடத்திய மின் வாரிய ஊழியர்கள், புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதேபோன்று, விருதுநகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மின்சார ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.