தமிழகம்

மறைந்த முன்னாள் MLA யசோதா உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா உடலுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான யசோதா, 4 முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ள யசோதாவின் மறைவிற்கு, காங்கிரஸ் தலைவர்களும், பிற அரசியல் கட்சித் தலைவர்களும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கேவி தங்கபாலு, திருநாவுக்கரசர், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தலைவர்களும், யசோதாவின் உடலுக்கு, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இளையராஜாவுடன் இணைவீர்களா?- பா.ரஞ்சித் பதில்

EZHILARASAN D

“இந்தியாவை முழுவனுக் காக்கனும் எங்கின் சமஸ்தானங்களை நம்மேன் காக்கனும்” – மலையாளத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D

இபிஎஸ் கருத்துக்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு

EZHILARASAN D

Leave a Reply