சினிமா

மறைந்த பின்பு நிறைவேறும் சித்ராவின் வெள்ளித்திரை கனவு… ‘கால்ஸ்’ பட பர்ஸ்ட் லுக் வெளியானது!.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா சமீபத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. அவரின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை சித்ராவின் நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறவுள்ளது.
சித்ரா கதாநாயகியாக நடித்த முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ‘கால்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை Infinite pictures தயாரிக்க சபரீஸ் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை சித்ராவுடன் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்சினி, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தாண்டே வெளியிடவிருந்த இப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. எனவே 2021ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி படத்தின் ட்ரைலர் மற்றும் ஜனவரி இறுதியில் படமும் ரிலீஸாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.,

சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த சித்ராவிற்கு வெள்ளித்திரையில் தோன்ற வேண்டும் என்பது பல நாள் கனவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரின் திரைப்படத்தை பார்க்க ரசிகர்கள் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜெய்பீம்: நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கு ரத்து

G SaravanaKumar

“விக்ரம்” வெற்றி: லோகேஷ் கனகராஜ் திருப்பதியில் தரிசனம்

Web Editor

மெல்போர்ன் திரைப்பட விழாவில் விருதை வென்ற ‘சூரரைப் போற்று’

Halley Karthik

Leave a Reply