முக்கியச் செய்திகள் உலகம்

மருத்துவமனை ICU-க்களில் அதிக அளவிலான கொரோனா வைரஸ்!

மருத்துவமனை ICU-க்களில் அதிக அளவிலான கொரோனா வைரஸ் காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இதுதொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் மருத்துவமனைகளில் உள்ள காற்றை வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஐசியு மற்றும் குளியறையில் அதிக அளவிலான கொரோனா வைரஸ் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்ற இடங்களை ஒப்பிடுகையில் ஐசியுக்களில் மாசுபாடு அதிகம் உள்ளதாகவும் தெரிகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள அறைகளில் சேகரிக்கப்பட்ட காற்று மாதிரிகளில் 17% கொரோனா வைரஸ் காணப்படுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேநேரத்தில் இந்த சதவீதம் ஐசியுக்களில் 25.2 ஆக இருக்கிறது. குறைந்தபட்சமாக 21 காற்று மாதிரிகளில் 5ல் கொரோனா வைரஸ் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 24 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 10 ஆய்வுகள் சீனா, அமெரிக்கா, ஹாங்காங், கொரியா, சிங்கப்பூர், ஈரான், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் தொற்றின் தீவிரத்தை பொறுத்து அந்த அறைகளில் உள்ள காற்றிலும் தொற்று காணப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் புதிய டி.ஜி.பி. சைலேந்திர பாபு

Jeba Arul Robinson

செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் – மத்திய கல்வி அமைச்சர்

Jeba Arul Robinson

‘மீனவர்கள் கைது விவகாரத்தில் திமுக அரசு நாடகம்’: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Arivazhagan Chinnasamy

Leave a Reply