குற்றம்

மனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கொலை செய்த கணவர்!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தனது மனைவியுடன் நெருங்கிய நட்பில் இருந்த இளைஞரை, கணவர் சந்திப்பதற்காக அழைத்து வந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலை சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி ஓங்கோலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் தனுஷ் என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது ஜோசபின் மனைவிக்கும் தனுசுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் நட்பு நாளுக்கு நாள் அதிகரித்ததில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பலமுறை தனியாக சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனர்.

இவர்களின் உறவு கணவர் ஜோசப்புக்கு தெரிய வரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் பலமுறை கண்டித்தும் கண்டுகொள்ளாத மனைவி, தொடர்ந்து தனுசுடன் நெருங்கிய நட்பில் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோசப் அவரது மனைவி மற்றும் அவரின் ஆண் நண்பரான தனுசையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என வரவழைத்துள்ளார். அப்போது பேசிக் கொண்டிருந்த போது ஜோசப், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனுசை சராமாரியாக குத்தியுள்ளார். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் அதனை தடுக்க முயன்றும் ஜோசப் சரமாரியாக வெட்டினார். இதில் தனுஷ் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உடல் சரிந்து உயிரிழந்தார்.

தனுஷை கொலை செய்த ஜோசப் நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். போலீசார் ஜோசப் மீது கொலை வழக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மனைவியின் அலுவலக நண்பரை சந்திப்பதற்காக வரவழைத்து கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:

Related posts

சென்னை வந்த விமானத்தில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

Saravana Kumar

காதலனின் பிரிவை தாங்க முடியாத பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

Saravana Kumar

போதைக்காக சானிடைசர் குடித்து உயிரிழக்கும் மது அருந்துவோர்!

Leave a Reply