இந்தியா

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அஸ்வினி குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் அஸ்வினி குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த வைரஸ் தொற்று பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள் சுகாதாரப்பணியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலரையும் பாதித்து வருகிறது. ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் என பலரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வரிசையில் தற்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அஸ்வினி குமாரும் இணைந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் தொன்றின. இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தனக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. நான் நலமாக உள்ளேன், மருத்துவர்களின் அறிவுரையின் படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். எனவே கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கார்கேவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சோனியா காந்தி

G SaravanaKumar

பண மோசடி வழக்கு – சிவ சேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது

Mohan Dass

செங்கோட்டைக்குள் நுழைந்த விவசாயிகள்… கொடியேற்றியதால் பரபரப்பு!

Saravana

Leave a Reply