புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் மத்திய குழுவின் வருகை சம்பிரதாயமாக இருக்கக்கூடாது என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசியல் சட்டம் நிலைத்திருக்கும் வரை அண்ணல் அம்பேத்கரின் புகழ் நிலைத்திருக்கும் எனக்கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று சேதாரத்தை காண்பிக்க வேண்டும் என தெரிவித்த அவர், மத்திய குழு வருகை சம்பிரதாயமாக இருக்கக் கூடாது என கேட்டுக்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனை தொடர்ந்து, மத்திய குழு போகாத இடங்களில், தமிழக அரசு குழுக்களை அனுப்பி சேதத்தை பார்வையிட்டு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் எனக்கூறினார். மேலும், டெல்லி விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு முறையாகக் கையாளவில்லை எனக்கூறிய அவர், விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 3 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், ஜனவரி மாதத்தில் ரஜினி கட்சி தொடங்கட்டும் என்றும், கொள்கை என்ன என்பதை பின்னர் பார்ப்போம் என திருநாவுக்கரசர் கூறினார்.