செய்திகள்

மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை கோரிக்கை!

மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் என தேசிய செட்டியார் பேரவை நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கோரிக்கை வைத்துள்ளார்.

மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கக் கட்டிடத்தில் தேசிய செட்டியார் பேரவையின் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் தேசிய செட்டியார் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா பங்கேற்றார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காலங்காலமாக செட்டியார் சமூகத்திற்கு வழங்கப்பட்ட வழிபாட்டு மரியாதையை மீண்டும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். மேலும் மதுரை விமான நிலையத்திற்கு கண்ணகியின் பெயரை சூட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement:
SHARE

Related posts

22 வருடத்துக்குப் பின் இங்கிலாந்து மண்ணில் சாதித்த நியூசிலாந்து!

Gayathri Venkatesan

“தமிழகத்தின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் மீட்டெடுக்க திமுகவை ஆதரியுங்கள்”: மு.க. ஸ்டாலின்

Halley karthi

கன்னியாகுமரியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

Gayathri Venkatesan

Leave a Reply