செய்திகள்

மதத்தின் பெயரில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது; நீதிமன்றம்

விதிமீறலில் ஈடுபடும் மத வழிபாட்டுத் தலங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என தலைமை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு தொப்பம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் கட்டடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மக்களின் மத உணர்வுகளை காரணம்காட்டி ஆக்கிரமிப்பில் ஈடுபடுவது, அதிக ஒலி எழுப்புவது, பிறருக்கு இடையூறு ஏற்படுத்துவது போன்ற விதிமீறல்களை அரசு தீவிரமாக கருத வேண்டும் எனக் கூறினார்.

மத வழிபாட்டுத் தலங்களில் ஏற்படுத்தப்படும் இடையூறுகளால் ஒரு மனிதன் நிம்மதியாக உறங்கக்கூட முடியவில்லை எனவும் நிம்மதியான வாழ்க்கைக்கான பாதுகாப்பை அரசு நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். அப்போது அரசுத் தரப்பில், வழிபாட்டுத் தலங்களில் உரிய அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டடத்தை பயன்படுத்த அனுமதிக்கப்படாது எனவும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான சத்தத்துடன் தடை செய்யப்பட்ட ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மத வழிபாட்டுத் தலங்களின் விதி மீறல் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் உரிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

ஜெயலலிதா பல்கலை., முதல் துணைவேந்தர் நியமனம்!

Niruban Chakkaaravarthi

காவு வாங்க காத்திருக்கும் நீர்த்தேக்க தொட்டி!

எல்.ரேணுகாதேவி

பாஜக அழிவு சக்தி என்பதை அதிமுகவும், அதன் தொண்டர்களும் உணர வேண்டும்; தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி

Saravana