தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் 3வது அணி அமையும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மாணவர்களுடன் உரையாடிய அவர், மநீம சார்பில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டதாகவும், இதனை பார்த்தே மற்ற கட்சிகள் கிராமசபை கூட்டம் நடத்துவதாகவும் குற்றஞ்சாட்டினார். விவசாயிகளின் தேவைக்கேற்ப மானியம் வழங்க வேண்டும் என வலியுறுத்திய கமல், அரசின் தேவைக்கேற்ப மானியம் வழங்கக்கூடாது எனவும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முன்னதாக திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், தமிழகத்தில் 3வது அணி அமைந்தால் மக்கள் நீதி மய்யம் தலைமையில்தான் அமையும் என்றார். மக்கள் நீதி மய்யமும் ஒரு திராவிடக் கட்சிதான் என கமல்ஹாசன் தெரிவித்தார்.