மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால், ராஜ ராஜ சோழன் மற்றும் திருமலை நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட, நீர் நிலைகள் மீட்டெடுக்கப்படும், என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று, தனது 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில், சென்னை மாநகரட்சியால் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைப்பிற்கு, எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், கமல்ஹாசன் கலந்துகொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது பேசிய அவர், குடிமராமத்து பணிகள் செய்வதை ஒரு சாதனையாக, தமிழக முதலமைச்சர் கருதுவதாக விமர்சித்தார். மேலும், இதுவரை ஆட்சியாளர்களால் கட்டிடங்களாக மாறிய நீர்நிலைகளை, மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் மீட்டெடுப்போம் என்றும், கமல்ஹசான் குறிப்பிட்டார்.