முக்கியச் செய்திகள் தமிழகம்

”மக்கள் நீதி மய்யத்தில் யாரும் எம்எல்ஏ ஆகப்போதில்லை”- கார்த்தி சிதம்பரம்!

மக்கள் நீதி மய்யத்தில் யாரும் எம்எல்ஏ ஆகப்போதில்லை என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ சபையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த ஒரு நடிகராக இருந்தாலும் பொது வாழ்க்கைக்கு வர வேண்டும் என்றால் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ரஜினியின் நிலைப்பாடு பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றும், படத்தை போல் நிஜவாழ்க்கையையும் நினைத்துக் கொள்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் பற்றி அவர் ஏதேனும் அறிக்கை விட்டிருக்கிறாரா என கேள்வி எழுப்பிய அவர், எந்த ஒரு கொள்கையும் இல்லாத இந்தக் கட்சி கண்டிப்பாக ஜெயிக்காது என்றும் கூறினார். பாஜகவின் இரண்டாவது கட்சிதான் ரஜினியின் கட்சி என விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் கடமை தவறினால் மக்கள் நீதி மய்யத்தின் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வார்கள் என்று கமல் கூறியுள்ளதற்கு பதிலளித்த அவர், ’அந்தக் கட்சியில் எம்எல்ஏக்களே வரப் போவதில்லை. பிறகு எதற்கு தீர்மானம் எல்லாம்’ என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வெளியானது ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் புதிய பாடல்

EZHILARASAN D

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி நீர் திறப்பு!

Web Editor

12,838 கவுன்சிலர்கள் இன்று பதவியேற்பு

Halley Karthik

Leave a Reply