தமிழகத்தில் ஒரு நேர்மையான மாற்று அரசை ஏற்படுத்தவே தாம் விரும்புவதாக மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி தனியார் விடுதியில் நடைபெற்ற சிறு குறு தொழில் முனைவோர்களோடு ஒரு கலந்துரையாடல் என்ற நிகழ்வில் கமல்ஹாசன் பங்கேற்றார். பின்னர் பேசிய அவர், தம் தந்தையிடம் மரியாதையை கற்றதால், அரசியல் கொள்ளையர்களை தாம் திட்டுவதில்லை என்று தெரிவித்தார். ஆளும் அரசு, மக்களிடம் ஏழ்மையை தக்க வைத்திருக்கிறது என்று குற்றம்சாட்டிய அவர், மக்கள் நீதி மய்யம் சிறந்த திட்டங்களை செயல்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் பொருளாதார வளம் படைத்த மாநிலமாக மாற்ற தமது கட்சி பாடுபடும் என்று தெரிவித்தார்.