முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

மக்களைப் பற்றிக் கவலைப்படுபவன் நான்: ஸ்டாலின் பேச்சு

‘ஆட்சியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களைப்பற்றிக் கவலைப்படுபவன் நான்’ என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “ எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் உங்களுடன் இருப்பவன் நான் என்ற உரிமையில் ஓட்டு கேட்க வந்துள்ளேன்.

ஆட்சிப் பொறுப்பிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி கவலைப்படும் ஸ்டாலினாக உங்கள் முன்பு நிற்கிறேன். வர்தா, கஜா, நிவர், புயலின் போது தமிழக அரசு கேட்ட நிதி உதவி கிடைக்கவில்லை. வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி நடக்கவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நமது மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்” என வலியுறுத்தினார்.

Advertisement:

Related posts

நீட் தாக்கம்.. அரசு குழு அமைத்தது வரம்பை மீறிய செயல்: மத்திய அரசு மனு

Halley karthi

அதிமுக தேர்தல் அறிக்கைக்கு ராமதாஸ் வரவேற்பு!

Gayathri Venkatesan

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டால் போதுமா?

Gayathri Venkatesan