25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

”மக்களுக்கு தேவையான திட்டங்களை முதல்வர் பழனிசாமி கொடுத்து வருகிறார்”- எஸ்.பி.வேலுமணி!

அறைக்குள் இருந்து அறிக்கை விடாமல், மக்களை சந்திக்கும் தலைவராக முதல்வர் பழனிசாமி இருப்பதால், 2021ல் அவரே முதல்வராக வருவார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அன்னூரில் அதிமுக நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் வேலுமணி, மக்களுக்கு தேவையான திட்டங்களை முதல்வர் பழனிசாமி கொடுத்து வருகிறார் எனக்கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பொங்கல் பண்டிகைக்காக, குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டது அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். மக்களுக்கு தேவையான திட்டங்களை கொடுத்து வரும் முதல்வர் பழனிசாமி மக்களின் தேவை அறிந்து செயல்படுவதாகவும் பாராட்டியுள்ளார். அனைத்து தரப்புமக்களும் ஏற்றுக்கொண்டுள்ள தலைவராக முதல்வர் பழனிசாமி இருப்பதால் மீண்டும் 2021ல் தமிழக முதல்வராக அவர்தான் வருவார் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

Niruban Chakkaaravarthi

ஒடிசா ரயில் விபத்து: காணாமல் போனதாக கூறப்பட்ட 8 தமிழர்கள் நலமுடன் உள்ளதாக அமைச்சர் உதயநிதி தகவல்

Web Editor

மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்: மருமகனை கத்தியால் குத்திய மாமனார் உள்பட 3 பேர் கைது!

Web Editor

Leave a Reply