அரசியலுக்கு வருவது பற்றி ரஜினிகாந்த் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது பற்றி தமக்கு தெரியாது என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
சென்னையில் கடந்த 30ந்தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அரசியல் நிலைப்பாடு குறித்து எவ்வளவு விரைவாக முடிவை அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிவை அறிவிப்பேன் என ரஜினிகாந்த் தெரிவித்தார். ரஜினி என்ன முடிவெடுக்கப்போகிறார் என அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்து பேசினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன், ஒரு சகோதரனை மற்றொரு சகோதரன் சந்திப்பதுபோல் ரஜினியை தாம் சந்தித்ததாகக் கூறினார். அரசியலுக்கு வர அழைப்பு விடுப்பதற்காக இந்த சந்திப்பை மேற்கொள்ளவில்லை என்றும் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
ரஜினியின் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்றும், மக்களிடமிருந்து அவர் எதையும் மறைத்தது இல்லை என்றும் கூறினார். ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து தமக்கு தெரியாது என்றும் தமிழருவி மணியன் கூறினார்.