முக்கியச் செய்திகள் தமிழகம்

மகளை காப்பாற்றுவதற்காக கடலில் இறங்கிய தந்தை உயிரிழப்பு!

திருவான்மியூர் கடற்கரையில் அலைச்சறுக்குப் பயிற்சியின் போது கடலில் மூழ்கிய மகளை காப்பாற்ற சென்ற தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெசன்ட்நகர் பகுதியை சேர்ந்த 55 வயதான பாலாஜி என்பவர் ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது 11 வயது மகள் ரேவதி கடலில் அலைச்சறுக்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். பாலாஜியும் தனது மகள் பயிற்சி பெறும் வரை அங்கேயே இருந்துள்ளார்.

அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் ரேவதி சிக்கிக் கொண்டார். இதனையடுத்து மகள் கடலில் மூழ்கியதை பார்த்த தந்தை அவரை காப்பாற்ற கடலுக்குள் சென்றபோது அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் எந்த பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக மீட்கப்பட்டார்.

பாலாஜியின் உடலை மீட்ட திருவான்மியூர் காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகளின் உயிரைக் காப்பாற்றும் போது தந்தை உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement:

Related posts

திமுக காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம்: எல்.முருகன் ஆருடம்

Nandhakumar

டிச.18ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்: தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறிவிப்பு!

Saravana

10 ஆண்டுகளாக முடங்கி கிடந்த குரோம்பேட்டை ரயில்வே சுரங்கபாதை பணிகள் மீண்டும் தொடக்கம்!

Saravana

Leave a Reply