ஆசிரியர் தேர்வு இந்தியா

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன் வரவேண்டும்! – மத்திய அரசு

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன் வரவேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்யக் கோரி பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரகணக்கான விவசாயிகள் டெல்லியை சுற்றிலும் ஒரு மாதமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் ஆறு முறைகளுக்கு மேல் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. எனினும், இருதரப்பிலும் பிடிவாதம் நீடிப்பதால் எந்த வித முடிவும் எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது.

இந்த நிலையில் மத்திய வேளாண் துறை இணைச் செயலாளர் விவேக் அகர்வால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும் படி கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வரும் தேதி மற்றும் நாள், நேரத்தை குறிப்பிடும்படியும் அந்தக் கடித த்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். போராட்டம் நடத்தும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதுமே திறந்த மனதுடன் இருப்பதாகவும் விவேக் அகர்வால் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

20 லட்சம் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப்

Halley karthi

மே 1 -முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

எல்.ரேணுகாதேவி

புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

Saravana

Leave a Reply