முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

போடியில் வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்!

போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தமிழகத்தில் அதிமுக, திமுக போட்டியிடும் தொகுதிகளை இரு கட்சிகளும் உறுதி செய்துள்ளது. மேலும், அதிமுக தான் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதாக அதிமுக அறிவித்திருந்தது.

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கலானது, வரும் 19ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்றும், காலை 11 மணி முதல் மாலை, 3 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சனி, ஞாயிறு கிழமைகளில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

போடியில் துணை முதல்வர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று காலை திமுக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு

G SaravanaKumar

சி.வி.சண்முகத்தை அதிமுக-விலிருந்து நீக்குவார்களா? புகழேந்தி கேள்வி

Vandhana

வீட்டில் போதைப் பொருள்: பிரபல நடிகர் அதிரடி கைது

Gayathri Venkatesan