முக்கியச் செய்திகள் தமிழகம்

பொறியியல் கலந்தாய்வு- நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில் சேர நாளை முதல் https://tneaonline.org/ என்கிற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் 19ந்தேதி வரை இணைய தளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் வாயிலாகவும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நாளை 12ம் வகுப்பு தேர்வு  முடிவுகள் வெளியாகும் சூழலில், நாளைய தினமே கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவும் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.  ஜூலை 20ந்தேதி  முதல் 31 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும் ரேண்டம் எண் ஜூலை 22-ல் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16ந்தேதி முதல் 18ந்தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ள உயர் கல்வித்துறை, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22ந்தேதி தொடங்கும் என அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ டீக்கடையில் மொய் விருந்து

Halley Karthik

ஜெய்பீம்: சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு

Halley Karthik

“கர்ப்பிணியாக இருந்த போது தற்கொலை எண்ணம் தோன்றியது” – இளவரசி மேகன் மார்கெல் அதிர்ச்சி தகவல்

Saravana Kumar