சபரிமலை ஐயப்பன் கோயில் பொன்னம்பலமேடு பகுதியில் விதிகளை மீறி சட்டவிரோதமாக உள்ளே நுழைந்து பூஜை மற்றும் சம்பிரதாயம் செய்தவர்கள் மீது கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலை சுற்றியுள்ள வனப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் முக்கிய மூலஸ்தானமாக விளங்கும் பொன்னம்பலமேடு பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லாத சூழலில் தடையை மீறி பொன்னம்பலமேடு பகுதியில் உள்ள ஜோதி தெரியும் இடத்தில் அமர்ந்து 5 பேர் விசேஷ பூஜைகள் செய்து உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டவிரோதமாக நுழைந்து பூஜை செய்த தமிழகத்தைச் சேர்ந்த நாராயணன் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையரை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கேட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி வனத்துறைத் தலைவர் மற்றும் காவல்துறைத் தலைவரிடம் புகார் அளிக்க உள்ளதாக சபரிமலை ஐயப்பன் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.