முக்கியச் செய்திகள் தமிழகம்

பொங்கல் விடுமுறை: சென்னையில் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை!

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்ல தமிழக அரசு 3 நாட்கள் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சென்னையில் மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் செல்வதற்கு வரும் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, மாமல்லபுரத்திலுள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னை கிண்டியில் உள்ள தேசிய பூங்காவிற்கு செல்லவும் 15, 16, 17ந்தேதிகளில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பொங்கல் விடுமுறையைக் கொண்டாட சுற்றுலா தலங்களில் மக்கள் அதிக அளவு கூடினால், கொரோனோ நோய் தொற்று ஏற்படும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஓபிஎஸ் பற்றி எங்களுக்கு கவலை இல்லை-கடம்பூர் ராஜு

Web Editor

நியாண்டர்தால் மனிதர்கள் குறித்து ஆராய்ச்சி செய்த ’ஸ்வாண்டே பாபோ’ என்ற விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

Niruban Chakkaaravarthi

தமிழ்நாட்டில் நாளை முழு ஊரடங்கு: இறைச்சிக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

Arivazhagan Chinnasamy

Leave a Reply