பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகளில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.
பொங்கல் பண்டிகையின் போது தொடர் விடுமுறை எதிரொலியால் சென்னையில் தங்கியிருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதையொட்டி அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் வரும் பொங்கலுக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகளுக்கு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
http://www.tnstc.in, http://www.busindia.com, என்ற இணையத்தில் மூலமாகவும், tnstc official மொபைல் app மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் http://www.redbus.in, http://www.paytm.com வாயிலாகவும் டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.