வணிகம்

பெண் ஓட்டுநர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் Zypp Electric!

எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மூலம் பொருட்களை டெலிவரி செய்யும் தொழிலை மேற்கொண்டு வரும் Zypp Electric நிறுவனம் தனது சேவைக்கு கிடைத்து வரும் அளவுக்கு அதிகமான தேவையின் காரணமாக தனது எலக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை 10 மடங்காகவும், பெண் ஓட்டுநர்களை பணியமர்த்தவும் முடிவு செய்துள்ளது.

350க்கும் மேற்பட்ட பிஸினஸ் – பிஸினஸ் வணிக நிறுவன தொடர்புகளை வைத்திருக்கும் Zypp, இந்நிறுவனங்களுக்காக டெலிவரி மேற்கொள்ளும் பார்ட்னராக இருந்து வருகிறது. தற்சமயம் 1,000 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

Zypp Electric

Zypp Electric நிறுவனத்தின் இணை நிறுவனர்களுள் ஒருவரும் தலைமை செயல் அதிகாரியுமான ஆகாஷ் குப்தா கூறுகையில், கூட்டு நிறுவனங்களின் தேவைக்கேற்ப 100 பெண் ஓட்டுநர்களை பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், மேலும் கூடுதலாக 9,000 எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை வாங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் மொத்த ஓட்டுநர்களில் 15 முதல் 20% ஓட்டுநர்களை பெண்களாக பணியமர்த்த கொள்கை முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் குப்தா கூறினார். அதே நேரத்தில் மொத்த வாகனங்களை காட்டிலும் 12,000 என்ற அளவில் ஓட்டுநர்களை பணியமர்த்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டீ கடையில் முதலீடு செய்த லேடி சூப்பர் ஸ்டார்

Gayathri Venkatesan

வணிகர்களுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை: முதலமைச்சர்

EZHILARASAN D

சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை

G SaravanaKumar

Leave a Reply