முக்கியச் செய்திகள் இந்தியா

பெண்களுக்கான சிறந்த இடம் சென்னை: ஐஐடி மும்பை நடத்திய ஆய்வில் தகவல்!

பெண்களுக்கான சிறந்த இடமாக சென்னை இருப்பதாக ஐஐடி மும்பை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது பெரும்பாலானோர் வேலைவாய்ப்புகளுக்காக நகரங்களை நோக்கி அதிக அளவில் வர ஆரம்பித்து விட்டனர். அங்கு அவர்களுக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பு உள்ளது? அவர்களது பொருளாதார பங்களிப்பு என்ன? உள்ளிட்ட கேள்விகளை அடிப்படையாக வைத்து சிறந்த நகரங்களின் பட்டியலை ஐஐடி மும்பை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதல்முறையாக பாலின சமத்துவத்தை அடிப்படையாக வைத்தும் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. பெண்களுக்கான சிறந்த இடமாக சென்னை இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பாட்னா கடைசி இடத்தை பிடித்துள்ளது.

இந்த ஆய்வின் 14 பிரிவுகளில் மும்பை முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்த இடங்களில் டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகியவை இடம்பிடித்துள்ளன. அடிப்படை வசதிகளில் புனேவும், பொருளாதார வளர்ச்சியில் மும்பையும், பாதுகாப்பில் கொல்கத்தாவும், போக்குவரத்து வசதியில் டெல்லியும், சுற்றுச்சூழலில் மும்பையும், உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கொல்கத்தாவும், பெண்களுக்கான பங்களிப்பில் சென்னையும் முதலிடத்தை பிடித்துள்ளன. கல்வி வளர்ச்சியில் பாட்னா 91 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு – முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த என்ஐஏ

Jayakarthi

உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் உடல் பெங்களூரு வந்தது

G SaravanaKumar

டிஎன்பிஎல் கிரிக்கெட்-வெளியேறியது மதுரை பாந்தர்ஸ்

Web Editor

Leave a Reply