முக்கியச் செய்திகள் தமிழகம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இன்றுமுதல் போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நாடு தளவிய அளவில் இன்றுமுதல் 3 நாட்களுக்கு போராட்டம் நடத்துகின்றன.

இதுதொடர்பாக, விசிக தலைவர் டாக்டர் தொல்.திருமாவளவன் எம்.பி, இந்திய கம்யூனிஸ்ய்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

அதில், செஸ் வரியை கூடுதலாக விதித்து, பெட்ரோல், டீசல் விலையை செயற்கையாக மத்திய அரசு உயர்த்தி இருப்பதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசை கண்டித்து இன்றுமுதல் 3 நாட்களுக்கு நாடுதழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் கிடைத்திட வகை செய்திட வேண்டும், தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Advertisement:

Related posts

பண மோசடி வழக்கில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது புகார்

Gayathri Venkatesan

அடுத்த 24 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Jayapriya

விவசாயிகள் உடனான 10ம் கட்ட பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது மத்திய அரசு!

Saravana