செய்திகள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் தவசி காலமானார்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 63

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் தந்தையாக முறுக்குமீசையுடன் கம்பீரமாக கருப்பன்சாமி அருள்வாக்குகூறும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் நடிகர் தவசி. கிழக்கு சீமையிலே படம் முதல் ரஜினிமுருகன், சுந்தரபாண்டியன், மெர்சல், அண்ணாத்த உள்ளிட்ட 147 படங்களில் தவசி நடித்துள்ளார். முறுக்குமீசையுடன் கம்பீரமாக வலம் வந்த அவர், கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். சமீபத்தில்  மருத்துவ செலவுக்காக உதவிக்கோரி,  நடிகர் தவசி,  சக நடிகர்களின் உதவி கேட்டு கண்ணீர் மல்க பேசிய வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைத்தது. அவரது நிலையை அறிந்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கினர். 

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார். அவருக்கு வயது 63. தவசியின் உடல் அவரின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மட்டப்பாறைக்கு எடுத்து செல்லப்படவுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“நமது நாட்டின் பெருமை நமக்கானது மட்டுமல்ல” – பிரதமர் மோடி உரை

G SaravanaKumar

இரண்டு நாட்களில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Web Editor

‘நான் வெஜ் பீட்சா’ வழங்கிய உணவகத்திடம் ரூ. 1 கோடி நஷ்டயிடு கேட்கும் உ.பி. பெண்!

Gayathri Venkatesan

Leave a Reply