தமிழகத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று சென்னை வருகிறது.
தமிழகத்தில் புரெவி புயலால் கடந்த டிசம்பர் முதல்வாரத்தில் 25 மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. திருவாரூர், கடலூர், நாகபட்டினம், திருவண்ணாமலை, திருவள்ளூர், பெரம்பலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விவசாயப்பயிர்கள் கடும் சேதம் அடைந்தன. 33 சதவிகிதம் அளவுக்கு அதிகமாக சேதம் அடைந்த பயிர்கள் விவரங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக விவசாயிகளின் வங்கி மற்றும் ஆதார் எண் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கணினியில் பதிவேற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்று புயல் சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது. சென்னை வரும் மத்திய குழு, மத்திய அரசிடம் அளிக்கும் அறிக்கையை பொறுத்து மத்திய அரசு கூடுதல் நிவாரண உதவிகள் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.